வடிவேலுவின் அட்டகாசமான ரீ-என்ட்ரி ! கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றானில் வடிவேலு நடிக்கிறாரா ? – உறுதியான தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் படத்தில் வடிவேலு நடிக்கிறார் – உறுதியான தகவல் ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் மூலம் திரையுலகில் தனது 5 வயதில் நடிகராக அறிமுகமான உலக நாயகன் கமல்ஹாசன் இந்த வருடத்துடன் திரைக்கு வந்து 60 வருடங்களை நிறைவு செய்கிறார்.இந்த 60 வருடங்களில் நடிகராக மட்டுமல்லாமல் நடன இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் உச்சம் தொட்டுள்ளார். இதனை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் விதமாக நேற்று (நவம்பர் 17) இசைஞானி இளையராஜாவின் இசையுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, பார்த்திபன், கார்த்தி, தேவி ஸ்ரீ பிரசாத், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த விழாவில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘தலைவன் இருக்கிறான்’ திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல சர்ச்சைக்கு பின் காமெடி நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டிவுள்ளது, இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு மற்ற படங்கள் நடிக்கவும் வாய்ப்புவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு உள்ளது .