அருண் விஜய், விஜய் ஆன்டனி கூட்டணி வெற்றி பெறுமா ! அக்னி சிறகுகள் …….

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைத்து நடிக்கும் “அக்னி சிறகுகள்”, ‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் நவீன் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அக்னி சிறகுகள்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் நடித்து வருகின்றனர்.மேலும், அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 43 நாட்களாக வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது. விஜய் ஆன்டனி மற்றும் அருண் விஜயின் இணைப்பு படத்திற்கு வெற்றி தருமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் ஏத்திகிர்பார்கின்றனர் , இந்த இருவரது கூட்டணி தூள் கிளப்பும் என்றும் ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர். இது மட்டும் அல்லது படத்தில் நடிக்கும் அணைத்து கதாபாத்திரங்களும் பிரபலமான நடிப்பில் சிறந்து விளங்கும் நடிகர்களே ஆகும் .