ஒரு தலை காதல் மோகம்… 18 வயது இளம்பெண்ணுக்கு வேலை செய்யும் இடத்தில் நடந்த கொடூரம்..! பதற வைக்கும் சம்பவம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்காவில் உள்ள வடமூர் என்ற பகுதியை சேர்ந்த (அனிதா) 18 வயது பெயர்மாற்றப்பட்டுள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள பிரபல நிறுவனமா ஹாட்சிப்ஸ் ஹோட்டலில் வேலைபார்த்து வந்தார்.

அப்போது அருகாமையில் உள்ள கிராமமான களமருதூரை சேர்ந்த சக்திவேல் என்பவரும் வேலைசெய்துவந்தார் அனிதாவை சக்திவேல் நீண்ட நாட்களாகவே ஒருதலையாக காதலித்துவந்தார்.

சக்திவேல் தன் காதலை பலமுறை அனிதாவிடம் சொல்லியும் அதை அவர் விரும்பவில்லை.

இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த சக்திவேல் அனிதாவை தீத்துக்கட்ட முடிவு செய்தார். வழக்கம் போல வேலைக்கு வந்த அனிதாவிடம் மீண்டும் தன் காதலை கூறினார்.

வழக்கம் போல அதனை அனிதா ஏற்காததால் கோபத்தில் தான் வைத்திருந்த கத்தியால் அனிதாவை பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுவிட்டார்.

ஹோட்டல் ஊழியர்கள் ரத்தவெள்ளத்தில் கிடந்த அனிதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை நடைபெற்றுவருகிறது.

தப்பிச்சென்ற சக்திவேலை போலீசார் கைது செய்து வழக்கு பதிவுசெய்துள்ளனர்.