சாலை ஓரம் நடந்து சென்ற பெண்ணின் மீது வேகமாக கார் மோதி மண்டை உடைந்தது! அதிர்ச்சியில் காப்பாற்ற ஓடிய பொதுமக்கள் …… கோரசம்பவம் நடந்த வீடியோ காட்சி வைரலாக பரவிவருகிறது…..

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி நந்தினி. 27 வயதாகிறது, இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், நந்தினி தனது வீட்டு பக்கத்தில் உள்ள பார்க் ஒன்றிற்கு குழந்தையை அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக படு ஸ்பீடாக வந்த கார், ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த நந்தினி மீது மோதியது. பிறகு அதே கார், நந்தினிக்கு முன்புறம் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீதும் மோதியது. கார் மோதிய வேகத்தில், நந்தினி தூக்கி வீசப்பட்டார்.இதில், படுகாயமடைந்த நந்தினியின் தலை நொறுங்கியது.

 

சாயங்கால நேரம் என்பதால், மக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. இதை பார்த்து பதறியஅடித்து கொண்டு வந்த அவர்கள், அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நந்தினி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து, நந்தினியின் உடல் உறுப்புக்களை தானமாக கொடுக்க அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பாக நந்தினியின் கணவர் அவினாசி ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாணையை மேற்கொண்டனர். இந்த அதிர்ச்சியான சம்பவம் அங்குள்ள ஒரு சி சி டி கேமராவில் பதிவாகிவுள்ளது ,இந்த வீடியோ காட்சி சோசியல் வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.