ஹனிமூன் சென்ற புதுமண ஜோடியின் மாப்பிளை மலைவுச்சியிலிருந்து கிழவிழுந்து இறந்தார் மனைவியின் கண் எதிரியை ? கதறி அழுத்த மனைவி !……

தேனிலவு சென்ற புது தம்பதி…மனைவி கண் முன்னே கீழே விழுந்து உயிரிழந்த கணவன் பரிதாபத்தில் புதுபெண். கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது பல அடி உயரத்தில் கணவன் வானத்தில் பறப்பதை ஆசை, ஆசையாக பார்த்து கொண்டிருந்தார் ப்ரீத்தி அடுத்த செகண்டே கீழே விழுந்து மனைவி கண்ணெதிரிலேயே துடிதுடித்து உயிரிழந்தார் கணவன்! சென்னை அமைந்தக்கரை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் போன வாரம் கல்யாணம் ஆனது. இதையடுத்து 2 பேரும் ஹனிமூனுக்காக குலுமணாலிக்கு சென்றுள்ளனர்.அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த இந்த தம்பதி, குலு அருகே டோபி என்ற இடத்தில் உள்ள பாராகிளைடர் சுற்றுலா தளத்துக்கும் சென்றனர்.

இந்த பாராகிளைடரில் செல்ல முன்கூட்டியே ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமாம். அதன்படியே அரவிந்தும், பிரீத்தியும் பாராகிளைடரில் பறக்க முன்பதிவு செய்திருந்தனர். முதலில் பிரீத்திதான் பாராகிளைடரில் ஏறினார். குதூகலத்துடன் மேலே பறந்துவிட்டு கீழே இறங்கிவிட்டார். இதற்கு பிறகு அரவிந்த் ஏறினார் கணவர் பல அடி உயரத்தில் பறப்பதை கீழே இருந்து ப்ரீத்தி ஆசை ஆசையாக பார்த்து கொண்டே இருந்தார், அந்த நேரம் பார்த்து அரவிந்த் கட்டியிருந்த பாதுகாப்பு பெல்ட் திடீரென கழன்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அரவிந்த் மேலே இருந்து தொப்பென கீழே விழுந்தார். இதில் மண்டை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கணவன் தன் கண் முன்னாடியே கீழேவிழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததை கண்டு பிரீத்தி அலறி துடித்தார். அரவிந்த விழுந்ததில் பாரா கிளைடரும் கீழே விழ ஆரம்பித்தது. இதனால், அதிலிருந்த பைலெட்டும் கீழே விழுந்ததில், பைலட் ஹரு ராமு என்பவருக்கும் பலமான அடிபட்டது.

அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்த போலீசார், அரவிந்த் உடலை கைப்பற்றி, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து டெல்லி கொண்டுவர ஏற்பாடு செய்து வருகின்றனர். அரவிந்த் சரியாக பாதுகாப்பு பெல்ட்டை கட்டாததே இதற்கு காரணம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனிலவுக்கு மகிழ்ச்சியுடன் கிளம்பி போன புதுமாப்பிள்ளை இப்போது பிணமாகி வருவது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.