ஆண் குழந்தைக்காக கணவனிடம் 16 வயது பெண்ணை கற்பழிக்க சொன்ன மனைவி !….. தம்பதியர்களை கைது செய்த போலீசார் ……

கடலூர் ,திட்டக்குடியை அடுத்த வையங்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதி அசோக்குமார் – செல்லக்கிளி. கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகிறது. 3 பெண்கள் குழந்தைகள் உள்ளனர் . ஆண் குழந்தை இல்லை. இதனால், கணவனைவிட செல்லக்கிளிக்கு அதிக கவலை வந்துவிட்டது. கணவனுக்கு 2வது கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்தார். 2-வது கல்யாணத்துக்கு சரி என்று சொல்லிவிட்டார்.அசோக்குமார் வேலை செய்யும் மில்லில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை நன்றாக தெரியும். அந்த பெண்ணுக்கு 16 வயதுதான் ஆகிறது. இந்த பழக்கத்தை வைத்து அந்த சிறுமியை கணவனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்று செல்லக்கிளி முடிவு செய்துள்ளார். விஷயத்தை கணவனிடம் சொல்ல, சிறுமியிடம் நெருங்கி பேச ஆரம்பித்துவிட்டார் அவர். இருவரும் சேர்ந்து, 2-வது கல்யாணம் பற்றி சிறுமியிடம் பேசி, வசதியான வாழ்க்கையை வாழலாம் என்று ஆசை ஆசையாக பேசவும், சிறுமியும் அதை நம்பி நம்பி உள்ளாள்.

போன வியாழக்கிழமை, ஓகலூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு போகிறோம் என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு, சிறுமியை கணவன், மனைவி அழைத்து சென்றுள்ளனர். அங்கு கணவனை வைத்து சிறுமிக்கு தாலி கட்ட சொன்னார் செல்லக்கிளி. கல்யாணம் முடிந்து தெரிந்தவர் வீட்டில் கணவனையும், சிறுமியையும் தங்க வைத்துள்ளார். அந்த 2 நாளுமே சிறுமியை கொடுமையாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி உள்ளார் கணவன்.கோயிலுக்கு போன மகளை காணோமே என்று செல்லக்கிளியிடம் பெற்றோர் கேட்க, முன்னுக்குபின் முரணாக பதில் சொல்லி உள்ளார். அதனால் சந்தேகமடைந்து, போலீசில் புகார் தந்தனர்.

மேற்கண்ட விவரங்கள் எல்லாம் விசாரணையில் தெரியவந்தது. கட்டாய திருமணம், கடத்தி சென்றது, சிறுமியை நாசம் செய்தது போன்ற குற்றத்துக்காக தம்பதி போக்சோவில் கைதாகி உள்ளனர். ஒன்றும் அறியாத அந்த 3 பெண் குழந்தைகள் அப்பா, அம்மா இன்றி தவித்து வருகின்றனர்.