நித்தியானந்தா ஆசிரமத்தில் கடத்தப்படும் சிறுமிகள் !.. 1 கோடி முதல் 4 கோடி வரை .. சர்ச்சை குறித்து போலீசார் தீவிர விசாரணை !…..

நித்தியானந்தாவின் செயலாளர் ஜனார்த்தனன் ஷர்மா தன்னுடைய இரண்டு மகள்களையும் நித்தியானந்தா கடத்திவிட்டதாகவும், அவர்களை மீட்டுத் தரும்படி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் குஜராத் பொலிசார் ஆசிரம பெண் நிர்வாகிகளான ப்ராணப்பிரியா மற்றும் பிர்யா தத்துவா என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர். நித்தியானந்தாவின் ஆசிரமம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ளது. அந்த வகையில் அகமதாபாத்திலும் அவருடைய ஆசிரமம் உள்ளது. இந்த இருவரும் 50-க்கும் மேற்பட்ட சிறுமிகளை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்ற புகார் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த நிலையில், நித்தியானந்தாவின் செயலாளர் ஜனார்த்தனன் ஷர்மா தன்னுடைய இரு மகள்களும் இந்த ஆசிரமத்தின் உள்ளே இருந்தனர், கடத்திவிட்டனர் என்ற புகாரை கொடுத்திருந்தார். இதையடுத்து குஜராத் பொலிசாரும், தேசிய குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் உள்ளே சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது உள்ளே சிறுமிகள் இல்லை.

இந்த சூழ்நிலையில் தான் நேற்று அகமதாபாத்தில் இருக்கும் விவேகானந்த நகர் காவல்நிலையத்தில் நித்தியானந்தா நிர்வாகிகள் ப்ராணப்பிரியா மற்றும் பிர்யா தத்துவா மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகளில் ஒருவர் வெளியே வந்து, அவருடைய வாக்குமூலத்தை காவல்துறையினரிடம் அளித்திருந்தார்.

அந்த வாக்குமூலத்தில், ஆசிரமத்தில் தங்கியிருக்கும் ஒவ்வொரு சிறுமிகளுக்கும் ஒரு கோடி துவங்கி 4 கோடி வரை நன்கொடை வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும், இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கும் என்று கூறியுள்ளார்.மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் விளம்பரத்திற்கு சிறுமிகளை பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் நடக்கும் கொடுமைகளை நித்தியானந்தாவின் செயலாளர் ஜனார்த்தனன் தான் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினார்.

அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு மகன் இருக்கின்றனர். அதில் இரண்டு மகள்களையும், ஒரு மகனையும் மீட்டிருக்கிறார். இன்னொரு மகள் மீட்கமுடியாத சூழல் உள்ளது. இது தொடர்பான விசாரணையில் தான் பொலிசார் கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? அவரின் இருப்பிடம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.