‘முன்பணம் 5 லட்சம்’.. ‘பாக்கி பணம் இன்னும் தரல’! டவரில் ஏறி தூக்கு மாட்டிய முதியவர்..!விவசாய நிலத்தை அபகரித்த “கார்ப்ரேட் நிறுவனம்”

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள செலவடை கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன் 86 வயது இவருக்கு சொந்தமான விவசாயநிலத்தில் பவர் கிரிட் நிறுவனம் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது மேலும் மின்கோபுரம் அமைந்துள்ள விவசாயநிலத்திற்கு நஷ்ட்டயீடாக ரூபாய் 10லட்சம் தருவதாக அந்த நிறுவனம் உறுதி அளித்தது.

முன்பணமாக ரூபாய் 5லட்சம் முதியவர் கிருஷ்னனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மின் கோபுர பணி முடியும் தருவாயில் இருப்பதால் மீதம் உள்ள 5லட்சம் தொகையை மின் கோபுரம் அமைக்கும் நிறுவனமிடம் கிருஷ்ணன் தொடர்ந்து கேட்டுவந்தார் அந்த நிறுவனம் எதோ காரணம் சொல்லி அலக்கழித்துவந்தனர்.

இதனால் விரக்தி அடைந்த முதியவர் கிருஷ்ணன் தன் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரத்தில் ஏறி கைருடன் தற்கொலை செய்யப்பவதாக போராட்டம் நடித்தினார்.

இந்த சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து. பேச்சி வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மின் கோபுரம் அமைக்கும் அதிகாரிகளை வரவழைத்தனர். பின் நடந்த பேச்சி வார்த்தைக்கு பிறகு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மீதம் உள்ள பணத்தை தருகிறேன் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.