2020ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி 7 மணிக்கு குழந்தைப் பெற்றுக் கொள்வேன் !… என்று நடிகை சமந்தா பகிரங்கமாக பேட்டியளித்தார்….

தான் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ரசிகர்கள் நச்சரித்து வருவதால் கடும் கோபத்துடன் சமந்தா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. அடுத்தடுத்து அவரது படங்கள் வெற்றியடைந்து வருவதால், புதிய பட வாய்ப்புகள் அவரைத் துரத்துகின்றன. சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.


வழக்கம் போல திருமணமான நடிகைகளைத் துரத்தும், ‘எப்போது குழந்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?’ என்ற கேள்வி . சமூகவலைதளப் பக்கங்களிலும், நேர்காணலிலும் மறக்காமல் இந்தக் கேள்வி கேட்கப்பட்டு விடுகிறது. இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் வழக்கம் போல் லைவ்வில் வந்த சமந்தாவிடம், அதே கேள்வியைக் கேட்க, அவர் ஆவேசமாகி விட்டார் . அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “என் உடல் எப்படி இயங்குகிறது எனக் கேட்பவர்களுக்கு, நான் 2020ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி 7 மணிக்கு குழந்தைப் பெற்றுக் கொள்வேன்” எனக் கோபமாக சமந்தா பதிலளித்துள்ளார்.

சமந்தா பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சமந்தாவின் இந்த பதில் குறித்து அவருக்கு ஆதரவாகப் பலர் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். இதைப் பார்த்து விட்டாவது இனி இது போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் தவிர்க்கிறார்களா எனப் பார்க்கலாம் என்றார் சமந்தா .