
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர் ,கடந்த ஆறு வருடங்களாக ஒரே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில், தனது பேச்சு திறமையாலும், குறும்பு தனங்களாலும் பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. தொலைக்காட்சியில் கிட்டதட்ட அனைத்து ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்குவது இவர் தான் என்றே கூறலாம்.
இருப்பினும், குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலம். அதில் இவரும், மாகாபா ஆனந்த் என இருவரின் காமெடியைப் பார்ப்பதற்காகவே ரசிர்கள் பட்டாளம் இருக்கிறது.இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியின் வெற்றி விழாவை கொண்டாட சூப்பர் சிங்கர் குழுவுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வெச்சு செய்துள்ளனர். அதாவது என்ன பிரியங்கா உங்களை கடைசியில் மாடு மேய்க்க அனுப்பிவிட்டார்களா! என்றெல்லாம் பலவிதமான கமெண்ட்டுகளை செய்துள்ளனர்.