
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். அடையாறில் இருந்து கிண்டி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இதனால் ஓட்டுநர் காரை திடீரென நிறுத்த, அதன் பின்னால் வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்து அந்தக் கார் மீது மோதி நின்றுள்ளது. இதையடுத்து நொடிப்பொழுதில் பேருந்தின் பின்னால் வந்த கார் ஒன்று அதன் பின் பக்கத்தில் வேகமாக சொருகிக் கொண்டுள்ளது.
4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட இந்த பயங்கர விபத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த புறநகர் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டதால் மேலும் பல பேருக்கு அடிபட்டு இருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது . அந்த சாலையில் போக்குவரத்து சற்று தாமதமாகி கொண்டு இருக்கிறது இந்த வாகன விபத்தினால் .