பண மழை பொழிந்தது ‘கட்டுகட்டாக’ மாடியில் இருந்து வீசப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகள்..! அள்ளிச்சென்ற மக்கள்..! காரணம் என்ன? வைரலாகும் வீடியோ

பண மழை பொழிந்தது கொல்கத்தாவில் அரசாங்கத்துக்கு தெரியாம அதிகமா சொத்து சேத்த இதுதான் நாடாகும் ,கொல்கத்தாவில் தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்தபோது கட்டுகட்டாக பணத்தை ஜன்னல் வழியாக வீசிப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பென்டிக் சாலையில் உள்ள அடுக்குமாடியில் தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அடுக்குமாடியின் ஜன்னல் வழியாக 2000, 500, 100 ரூபாய் நோட்டுகளை கட்டுகட்டாக வீசியுள்ளனர்.

 

மாடியில் இருந்து மழை போல பணம் கொட்டுவதைப் பார்த்த ஊழியர்களும், பொதுமக்களும் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாடியில் இருந்து பணம் வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.