கட்டாயப்படுத்தி ‘போதைப் பொருளுக்கு’ பழக்கி.. ‘கணவர் செய்த நாச காரியம்’.. ‘பெண் மருத்துவருக்கு’ நேர்ந்த பரிதாம்…??

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவராக வேலை பார்த்துவந்தவர் சோனம் மோடிஸ் மருத்துவரான கணவர் கொடுமையால் வீட்டில் சடலமாக போலீசார் மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சோனம் தந்தை கூறியது:

மருத்துவ படிப்பை முடித்துவிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவராக வேலை செய்துவந்தார் சோனம் அப்போது மருத்துவராக உடன் வேலைபார்த்து வந்த ஷிகர் மோர் என்பவருடன் நட்பாக பழகினார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். பின் திருமணம் செய்யுமாறு எங்களிடம் வற்புறுத்தினார்கள். ஷிகர் மருத்துவர் என்பதால் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

அதனைத்தொடர்ந்து கடந்த 2019 மே மாதம் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலே ஷிகரின் சுயரூபம் தெரியவந்தது அவர் போதை பொருளுக்கு அடிமையானவர். மற்றும் என் மகள் சோனத்தை வரதட்சணை கேட்டு கொடுமை படித்தி வந்தார். மிக பெரிய கொடுமையான போதை பொருளை என் மகளை பயன்படுத்த சொல்லி துன்புறுத்தி வந்தார்.

தொடர்ந்து போதைப்பொருள் உட்கொண்டதால் சோனத்திற்கு உடல் நிலை மோசமனைதை அடுத்து அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சென்றோம். அப்போது ஷிக்கரின் பெற்றோர்கள் எங்களையும் சோனத்தையும் சமாதானப்படுத்தி இனிமேல் நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்று உறுதியளித்தனர்.

மேலும் அதனை தொடர்ந்து சோனத்தை ஷிகரின் பெற்றோர்கள் கொல்கத்தாவுக்கு அழைத்துவந்தார். சில நாட்களில் ஷிகரின் பெற்றோர்களும் சோனத்தை கொடுமை படுத்த ஆரம்பித்தனர். இதனால் நாங்கள் சோனத்தை எங்களுடனே அழைத்து வந்துவிட்டோம்.

சிலமாதங்களுக்கு பிறகு எல்லாத்தையும் மறந்து மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றால் சோனம் இதனையறிந்த ஷிகர் அங்கு வந்து தொல்லை குடுத்து வந்தார்.

இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து விலகி ஹரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலைபார்த்துவந்தார். இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை சோனத்திற்கு போன் செய்தோம் நீண்ட நேரமாகியும் எடுக்கவில்லை இதனால் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தோம் வீட்டின் அறையில் சடலமாக இறந்து கிடந்தார்.

இதனால் அதிர்ந்து போனோம் என் மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை பெண் இல்லை நாங்களும் அவளை அப்படி வளர்க்கவில்லை மேலும் ஷிகரும் அவரின் பெற்றோர்கள் தான் என் மகளை வற்புறுத்தி தற்கொலை செய்யவைத்துள்ளனர். சோனத்தின் தந்தையின் புகாரின் பேரில் ஷிகர் மேட்டரும் அவரின் பெற்றோர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட பிரேத பரிசோதனையில் சோனம் அளவுக்கு அதிகமாக போதை பொருள் உட்கொண்டுள்ளார் என்று கூறினார்கள் சோனம் உபயோகப்படுத்திய ஊசி போன்றவற்றை தடவியல் நிபுணர் குழுவுக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே இது கொலையா, தற்கொலையா எனத் தெரியவரும் என அவர்கள் கூறியுள்ளனர்.