இவளோ சொத்து இருந்தும் அத அனுபவிக்கமுடியாம போய்ட்டியே ! மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போன தந்தை ?……

கேரளா , 6 பைக், ஒரு சொகுசு கார் இருந்தும் தந்தை ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கித் தர மறுத்ததால் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜி குமார் என்பவருடைய மகன் அகிலேஷ் (19). தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவந்த அகிலேஷிடம் விதவிதமான விலையுயர்ந்த 6 பைக்குகள் மற்றும் ஒரு சொகுசு கார் இருந்துள்ளது. இந்நிலையில் ரூ.14 லட்சம் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக் வேண்டுமென அவர் தந்தையிடம் கேட்டுள்ளார். ஏற்கெனவே 6 பைக்குகள் இருப்பதால் அஜி குமார் புதிதாக பைக் வாங்கிக் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தந்தையிடம் பேசாமல் இருந்துவந்த அகிலேஷ் தன் தாயிடம் மட்டும் பேசி வந்துள்ளார். சில மாதங்களில் தந்தை அந்த பைக்கை வாங்கித் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த அகிலேஷ், அது கிடைக்காது என தெரிந்ததும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. நேற்று காலை நீண்ட நேரமாக அவரது படுக்கையறை கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அகிலேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.