கெட்டவார்த்தை சொல்லித்தந்து வைரமுத்துவை’ திட்டச் சொன்னதே “நித்யானந்தாதான்”! ஆசிரமத்தில் மீட்கபட்ட இளம்பெண் வாக்குமூலம்!

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் 100 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமா அடைத்து வைத்துள்ளதாக பெற்றோர்களின் புகாரால் ஏற்பட்ட சர்ச்சை..

நித்தியானந்தாவின் மேலாளர்களில் ஒருவருவரான ஜனார்த்தனன் சர்மா அவர்கள் தனது நான்கு மகள்களை நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். பின்னர் இரண்டு மகள்களை அஹமதாபாத்தில் இருக்கும் ஆஸ்ரமத்திற்கு மாற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து அஹமதாபாத்தில் இருக்கும் இருமகள்களை மீட்டுகொண்டுவந்தார்.

இந்தநிலையில் நித்தியானந்தாவின் பெங்களூரில் இருக்கும் பிடதி ஆசிரமத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டினார் ஜனார்த்தனன் சர்மா இந்தநிலையில் நித்தியானந்தாவின் பிடியில் இருக்கும் இருமகள்களில் ஒருவர் நித்யானந்தாவின் ஆசிரமம் பற்றிய சில உண்மைகளை நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் முகமூடியால் முகத்தை மறைத்துக்கொண்டு பேட்டியளித்தார் அதில் அவர் கூறியது எங்களுக்கு கெட்ட வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்து கவிஞர் வைரமுத்துவை, ஒருமையில் பேசச் சொன்னதே நித்யானந்தாதான் எங்களை கட்டாயப்படுத்தி அநாகரிகமாக பேச சொன்னார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த இருபெண்களையும் போலீசார் மீட்டெடுத்தனர்.