மினிமம் பேலன்ஸ் இல்லனா இப்போ அதையும் சேர்த்து பிடிக்கறாங்களாம் உஷார்!… எஸ்பிஐ வங்கியில் அறிக்கை வெளியிட்டுள்ளது …..

எதுலலா ஜிஎஸ்டி பிடிக்கறதுனு ஒரு அர்த்தமே இல்ல இதுலயும் கூடவா , எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வைக்கவில்லை என்றால், வசூலிக்கப்படும் அபராத தொகை குறித்த விவரத்தை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பல கோடி மக்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைக்க வேண்டும். இது தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும். இது மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் என தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும்.

மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக கட்டாயம் வைத்திருக்க வேண்டும். புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். அதேபோன்று கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

இதனிடையே இந்த மினிமம் பேலன்ஸை வைக்க தவறினால் எவ்வளவு அபராத தொகை வசூலிக்கப்படும் என்பது குறித்த விவரத்தை எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ”மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.அதேபோன்று புறநகர் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டியும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.