‘அதிகமா ஆபாச வீடியோ பார்க்கும் ஆண்கள்’…’காத்திருக்கும் பேராபத்து’…அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு!

உலக அளவில் ஆபாச இணையத்தளங்களுக்கு கோடிகளில் பணம் கொட்டுகிறது. தினமும் கோடிக்கணக்கான பேர் இந்த இணையதளங்களில் ஆபாச படங்களை பார்க்கிறார்கள். இதில் இளம் பருவத்தினர் முதல் நடுத்தர வயதினர் மிகவும் அதிகம். இந்நிலையில் சமீபத்தில் வந்திருக்கும் ஆய்வு ஆபாச படங்களை பார்க்கும் ஆண்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக அமைத்துள்ளது. திருமணமாகாத மற்றும் விவாகரத்து பெற்ற ஆண்கள் அதிக அளவில் இந்த இணையதளங்களில் நேரம் செலவிடுவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இதனை தொடர்ந்து பார்க்கும் பட்சத்தில், ஆண்களுக்கு ஆண் குறி விறைப்பில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ஆபாசப்படங்கள் மட்டுமல்லாது, திருப்தியான உடலுறவு இல்லை என்றாலும் ஆண் குறி விறைப்பின்மை பிரச்னை ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற 80 சதவீத ஆண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டெய்லி மெயில் இணையத்தளத்தில் வந்துள்ள தகவலில் ”ஆபாச வீடியோக்கள் மட்டுமன்றி ஆண்களின் ஆல்கஹால் பழக்கமும் ஆண் குறி விறைப்பில் ஏற்படும் பிரச்சனைக்கு பெரும் பங்காற்றுகிறது. உலகமுழுவதும் மில்லியன் கணக்கான ஆண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆண்கள் தொடர்ந்து ஆபாச வீடியோகளை பார்ப்பதால், அவர்களின் திருமணத்திற்கு பிறகு உடலுறவுக்கு தயாராகும்போது பதட்டம், பயம் ஏற்படுகிறது. இதனால் அவர்களால் முழுமையான உடலுறவில் ஈடுபட இயலாமல் போய்விடுகிறது. இது ஆண்களுக்கு தனது துணை முன்பு கூனி குறுகும் நிலைக்கு கொண்டு செல்கிறது. அதுவே அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை அளிக்கிறது. இது மேலும் உடலுறவில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் விறைப்பின்மையை அதிகரிக்கிறது” என அந்த ஆய்வில் தெரிவிக்கப்படுள்ளது.