கணவனின் பெயரை பச்சை குத்திய காதலியை கழுத்தை நெரித்து கொன்றான் காதலன் !……

கணவன் இருக்கும் பொருட்டு கள்ளக்காதல் செய்தல் இதுதான் கிடைக்கும் . நாமக்கல் மாவட்டம் ராம்புதூரைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளியின் ரமேஷ் என்பவரது மனைவி திருமங்கை. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் வாயில் துணிவைத்து அடைக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இந்த தம்பதியருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகிய நிலையில், கடந்த 17ஆம் தேதி மாலை, கோவிலுக்குச் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் திருமங்கை சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பாத நிலையில், அவரது போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னரே திருப்பூர் அருகே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

திருமங்கையின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்தபோது, நாமக்கலைச் சேர்ந்த 22 வயதான தனபால் சிக்கினார். திருமணத்துக்கு முன்பாக திருமங்கை ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். அப்போது ஜேசிபி இயந்திர ஓட்டுநராக இருந்த தனபாலுடன் காதலாக பழகி வந்த திருமங்கை, தனது வயது மூப்பின் காரணமாக அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டு, தன்னுடன் பணிபுரிந்த ரமேஷை திருமணம் செய்துகொண்டார்.

ஆனாலும் தனபாலுடன் உறவைத் துண்டிக்காமல் இருந்த திருமங்கை, காணாமல் போன அன்று இரவு பொழுதை தனபாலுடனே கழித்துள்ளார். அப்போது திருமங்கையின் கையில் ஆடம்ஸ் என்று பச்சை குத்தியிருந்ததை பற்றி தனபால் கேட்க, அதற்கு திருமங்கை, அது தனது கணவர் ரமேஷின் இன்னொரு பெயர் என்று கூறியதை நம்பாமல் தனபால், திருமங்கையை கழுத்தை நெறித்துக் கொன்று வீசியுள்ளார்.விசாரணையில் தெரியவந்த இந்த உண்மைகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருமணத்திற்கு பின்பு ஏவல் அந்த காதல் உறவை தொடர்ந்துதான் ஏவல் சாவுக்கு கரணம் என்று வூர்மக்கள் கூறுகின்றனர்.