குழந்தையுடன் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படம்.. “Light of my life”… குவியும் வாழ்த்துக்கள்..!

வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து பல திரைப்படங்கள் நடித்த நடிகை எமிஜாக்சன் , இவர் தமிழ் மட்டும் அல்லாது பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை எமிஜாக்சன் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.

ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை திருமணம் செய்ய முடிவு எடுத்து நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டார். பின்னர், திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான இவர், 2020ல் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே செப்டம்பர் 23-ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண்ட்ரியாஸ் ஜேக்ஸ் பனாயோது என அந்தக் குழந்தைக்கு பெயரிட்டுள்ளனர்.

அதன் பின்னர் தனது குழந்தையுடன் சில புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது, குழந்தையுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு (Light of my life)”என் வாழ்கையின் ஒளி நீ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பார்வையாளர்கள் குழந்தையை புகழ்ந்து வருகின்றனர்.