‘பள்ளியில் தலைவிரி கோலத்தில்’ அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை…? மிரண்டு ஓடிய மாணவர்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை ஒன்றியத்தில் இருக்கும் அய்யம்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது அரசு தொடக்கப்பள்ளி இப்பள்ளியில் இந்திரா என்ற தலைமையாசிரியர் கடந்த 3 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.

அய்யம்பட்டியில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் வெறும் இரண்டு மாணவர்கள் மட்டுமே தான் பள்ளிக்கு வருகிறார்கள். சமீபத்தில் அந்த இரண்டு மாணவர்களும் சரிவர வரவில்லை.

மாணவர்கள வருகை இல்லாததால் இப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு பணியிடை மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார்.ஆனால் அதிகாரிகள் இந்திராவின் மனுவை நிராகரித்துள்ளார்.

மனு நிராகரிக்கப்பட்டதால் விரக்தியடைந்த தலைமையாசிரியர் இந்திரா சிறுபிள்ளை போன்று, அழுது அதிகாரிகள் முன்னிலையில் தரையில் புரண்டுள்ளார்.இந்திரா இதுபோல விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டதால் கல்வித்துறை அதிகாரிகள் இந்திராவை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இதனால் கலங்கி போன இந்திரா மாவட்ட முதன்மை கல்வி அலுவகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மகளிர் போலீசாரை வரவழைத்து தலைமையாசிரியர் இந்தவராவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆசிரியர் மத்தியில் பெரும் சலப்பை ஏற்படுத்தியுள்ளது.