Connect with us

‘கொலையும் இல்லை’… ‘தற்கொலையும் இல்லை’ பிணமாக கிடந்த பெண்..! நீங்காத மர்ம மரணம்…??

CINEMA

‘கொலையும் இல்லை’… ‘தற்கொலையும் இல்லை’ பிணமாக கிடந்த பெண்..! நீங்காத மர்ம மரணம்…??

சீனாவில் உள்ள ஹாங்காங் பகுதியில் வசிப்பவர் எலிசா லாம் இவர் கடந்த 2013ஆம் ஆண்டு மேல் படிப்பிற்க்காக கனடா சென்று படித்துவந்துள்ளார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது அமேரிக்காவிற்கு தனியாக சுற்றுலா சென்றுள்ளார்.

அமேரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் பகுதியில் உள்ள மிகவும் பிரபலபெற்ற சிசில் என்ற ஹோட்டலில் 2013 ஜனவரி 26ம் தேதி தங்குவதற்க ரூம் எடுத்தார். ஒரே ரூம்பில் பத்து நபர் தங்கும் கமர்ஷியல் ரூம்பை எடுத்தார். பின்னர் ரூமில் இருக்கும் மற்ற நபர்கள் எலிசா லாமை பார்த்து இவளை பார்த்தாலே எங்களுக்கு எரிச்சல் ஆகிறது. அதனால் இவள் எங்கள் ரூமைவிட்டு வெளியேறவேண்டும் என்று ஹோட்டல் மேலாளரிடம் கூறினார்கள் அதை தொடர்ந்து எலிசா லாம் வேற ரூம்பிற்கு மாற்றப்பட்டால்.

இதனைத்தொடர்ந்து ஜனவரி 30ம் தேதி எலிசாவை பெற்றோர்கள் அலைபேசியில் தொடர்புகொண்டார்கள். தொடர்புகொள்ள முடியவில்லை இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் லாஸ் ஏஞ்சல் சென்று எலிசா தங்கிருந்த சிசில் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டனர். அவர்களும் காணவில்லை என்று கூறினார்கள்.

இதனால் லாஸ் ஏஞ்சல் போலீசில் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படியில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார். எந்த வித தடையும் ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் போலீசார் குழம்பி நின்றனர்.

இந்தநிலையில் மோப்பை நாயை வரவழைத்து ஹோட்டலில் இருக்கும் முலை முடுக்கெல்லாம் தேடினர். அப்போதும் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து சிசில் ஹோட்டலில் தங்கிருந்து ஒருவர் குளியல் அறையில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது என்று ஹோட்டல் ஊழியர்களிடம் கூறினார். அதனை தொடர்ந்து மேல் தளத்தில் இருக்கும் வாட்டர் டேங்கை ஆயு செய்தார் அப்போது அங்கு ஒரு பெண்ணின் பிணம் மிதந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

குடிநீர் தொட்டிக்குள் நிர்வாணமாக கிடந்த பெண் பிணம் பின்னர் அதை எடுத்த போது ஆடை எல்லாம் தொட்டியின் மேல மிதந்து கொண்டு இருந்தது. ஆய்வில் காணாமல் போன எலிசா தான் என்று போலீசார் உறுதி அளித்தனர்

எலிசா கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வில் இவர் கற்பழிக்க படவில்லை தற்கொலையும் செய்யவில்லை என்று மருத்துவர்கள் கூறினார். இதனால் மேலும் மர்மம் அதிகரித்து.

இதனால் போலீசார் ஹோட்டல் அறையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தன. அதில் எலிசா லிப்டில் இருந்தார் அப்போது வித்யாசமான நடவடிக்கை செய்தார் எலிசா மேலும் யாருக்கோ பயந்து வந்து லிப்ட்டில் மறைந்தார். பின்னர் வெளியே சென்று யாரிடமோ பேசியிருந்தார் ஆனால் அங்கு யாருமே இல்லை பின்னர் கைகளை வித்யாசமான முறையில் செய்தார்.

இந்த வீடிவோவை பார்த்த அனைவரும் எலிசாவிற்கு பேய் பிடித்துள்ளது என்று கூறினார்கள். ஆனால் போலீஸ் தரப்பில் இந்த பெண்ணிற்கு “பைபோலர்” என்ற இரட்டை மனநிலை நோய் இருந்துள்ளது அதனால் யாரோ பின் தொடர்கிறார்கள் என்று நினைத்து டேங்கில் ஒளிந்து கொண்டுள்ளார். பின்னர் வெளியே வரமுடியாமல் அங்கேயே இறந்துள்ளார்.

எலிசாவின் மரணத்தில் மேலும் மர்மம் அதிகரித்துள்ளது. இதற்க்கு முன்னர் எலிசாவிற்கு இந்த இரட்டை மனநிலை நோயிருப்பதாக எந்த மருத்துவ அறிக்கையிலும் தெரிவிக்கவில்லை. மேலும் இவர் இறந்த டேங்க் மொட்டைமாடியில் உள்ளது. அங்கு ஹோட்டல் மேலாளர் அனுமதி இல்லாமல் யாருமே செல்ல முடியாது. எப்போது அந்த டோர் லாக்கில் இருக்கும். பூட்டை உடைத்தாலும் அனைவருக்கும் ஆலயம் ஒளி கேக்கும். இதனை மீறி எப்படி சென்றிருப்பர்.

அப்படியே சென்றாலும் அந்த டேங்க் சுமார் 8அடி உயரம் உள்ளது. மேலும் கான்கிரிட் சுவற்றுக்கு மேலாலே டேங்க் அமைந்துள்ளது. டேங்க்கிற்குள் போகவேண்டும் என்றால் ஒரு நீளமான ஏணி வேண்டும். மொட்டைமாடியில் ஏணி வசதி இல்லை. கீழே இருந்துதான் ஏணி கொன்டுசெல்லவேண்டும் இது சாத்தியம் இல்லாத ஒன்று. இவ்வளவு தடைகள் இருக்கும் போது எலிசா எப்படி டேங்கிற்குள் ஏறி இறந்தார். உலகில் நடந்த மிக மர்மமான மரணங்களில் இதுவும் ஒன்று இன்னுமே எலிசாவின் மரணம் புரியாத புதிராகவே உள்ளது.

Continue Reading
To Top
error: Content is protected !!