‘பக்தியுடன் சாமி கும்பிட்ட நபர்’…? அம்மனிடம் தன் ‘சுயரூபத்தை காட்டிய’ மர்ம மனிதன்…!! CCTV சிக்கிய காட்சி

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட நகைகள் திருடு போயுள்ளது. இதனை அறிந்த கோவில் நிர்வாகிகள் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படியில் காவல்துறையினர் காலையில் நடை திறக்கும் போது இந்த திருட்டு நடைபெற்றுக்கும் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவில் கர்ப்பகிரகத்தில் இருக்கும் CCTV கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பக்தர் போல வந்த ஒருவர் முதலில் அம்மனை பக்தியுடன் வணங்கினார்.

பின்னர் சுத்தியும் பத்தியும் பார்த்து அம்மன் அணிந்திருக்கும் தங்க நகைகளை திருடி தான் கொண்டு வந்துள்ள துணியில் மறைத்து கொண்டு சென்றுள்ளார்.

இந்த காட்சியை பார்த்த போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.