திருடுவதற்கு முன் மன்னிப்பு கேட்ட திருடன் !…. வைரலாகும் வீடியோ காட்சிகள் …..

ஒரு பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகிவுள்ளது .தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் துர்க்கை அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கிரீடம், தங்கச் சங்கிலி, கை காப்பு உள்ளிட்டவைகள் திருடு போயுள்ளன. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கோயில் நடை திறக்கும் சமயத்தில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து கோயில் கர்ப்பகிரகத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்ந்து பார்த்ததில், பக்தர் போல உள்ளே வந்த ஒருவர் நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. அதில் டிப்டாப் உடையணிந்து வந்த நபர் முதலில் அம்மனை பயபக்தியுடன் வணங்குகிறார். பின்னர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த கிரீடத்தை எடுக்கிறார்.

 

பின்னர் திருடிய கிரீடத்தை உடையில் மறைத்து வைத்து வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நாலாபக்கமும் பார்த்த அவர் மேலே சிசிடிவி கேமரா இருந்தது தெரியாமல் போயுள்ளது. இந்நிலையில் இந்த காட்சிகளின் அடிப்படையில் அம்மன் நகைகளை திருடிசென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.