திருமண ஆசைக்காட்டி கூட்டுபலாத்காரம் செய்து புதைத்த பெண்ணின் சடலம் !…… 7 வருடங்களுக்கு பிறகு திடுக்கிடும் தகவல் …..

எந்த சம்பவத்தையே விசாரிக்கையில் புதைத்துவைத்த பொக்கிஷம் போல் வெளியே தெரிய வந்தது திடுக்கிடும் சம்பவம், பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற புதைத்த சம்பவம் 7 வருடங்களுக்குபின் தெரியவந்துள்ளது.நெல்லை மாவட்டம் லாலுகாபுரத்தை சேர்ந்த ஜெயராம் என்பவரை கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மணிகண்டன், ஆசீர்வாதம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் அவர்கள் தகவல்களை தெரிவித்துள்ளனர். அதில் கடந்த 2012-ம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து பெண் ஒருவரை கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநரான சிவக்குமார், மணிகண்டன், ஆசீர்வாதம் ஆகிய மூவரும் நண்பர்கள். இதில் சிவக்குமார் ரெட்டியார்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதனால் திருமணம் செய்துகொள்வதாக கூறி அப்பெண்ணை சிவக்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்களான மணிகண்டன், ஆசீர்வாதம் ஆகியோரும் பாலியல் வன்கொடுமை செய்ய சிவக்குமார் உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தியதால் நெல்லை அருகே வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். சில நாட்களில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் மற்றும் ஆசீர்வாதத்தை அழைத்த சிவக்குமார் மீண்டும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை தச்சநல்லூர் வாசுடையார் சாஸ்தா கோயில் அருகே புதைத்துவிட்டு தப்பியுள்ளனர்.இதனை அடுத்து மும்பை சென்ற சிவக்குமார் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். மணிகண்டன் மற்றும் ஆசீர்வாதம் அளித்த தகவலின் அடிப்படையில் சிவக்குமாரை கைது செய்து நெல்லை கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூவரும் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு பின் பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.