சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் முகேன்?.. கவின் தான் உண்மையான வெற்றியாளர் ! ..கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

உலக பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகேனுக்கு என்றும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவிற்கு புகழை பிக் பாஸ் மூலம் பெற்று கொண்டார். இந்நிலையில், பிக்பாஸ் கொண்டாட்டம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த கொண்டாட்டத்திற்கு பிறகு முகேனும், தர்ஷனும் ‘wall’ என்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்கள். மேலும், சூப்பர் சிங்கர் சீசன் 7 பைனல் நிகழ்ச்சிக்கு முகேன் விருந்தினராக கலந்து கொண்டார். இப்படி முகேனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெற்றிக்கு மேல் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் நிறைய வந்து குவிகின்றது. “முகெனின் வெற்றி பயணங்கள்” என்று ஒரு புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

முகேன் வெற்றியை குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள போகிறார். மேலும், முகேன் வெற்றி பயணத்தை வருகிற ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளார்கள். ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இதே போல முகேனுக்கு கொடி பிடித்து வருவதால் ரசிகர்களுக்கு இருந்த விருப்பம் போய் தற்போது வெறுப்பு தான் வருகிறது என்று குமுறுகிறார்கள்.

ரசிகர்கள் முகேனை வெறுக்க குறித்த தொலைக்காட்சியே காரணம் என்று கூறப்படுகின்றது. குறித்த தொலைக்காட்சி வெளியிட்ட புரோமோவிற்கு ரசிகர்கள் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.இதேவேளை, கவின் ரசிகர்கள் கவின் தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறி வருகின்றனர். இது கவின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.