திருப்பூர் அருகே எந்த பொண்ணை பார்த்தாலும் இப்படித்தான்.. 23 வயதில் 9 கல்யாணம் .. ராஜா வழக்கை… பலே இளைஞன்!

தஞ்சையில் 23 வயதான இளைஞன் ஒருவன் 8 பெண்களை காதல் வசப்படுத்தி திருமண புரிந்துள்ளான். “உன்னை பார்த்துட்டே இருக்கணும்போல இருக்கு.. நீ ரொம்ப அழகா இருக்கே..” எந்த பெண்ணை பார்த்தாலும் முதல்பேச்சே இப்படித்தான் ஆரம்பிக்கும்.. வயசு வெறும் 23தான்.. ஆனால் மொத்தம் 8 பெண்களை கல்யாணம் செய்துள்ளார்.. 9வது கல்யாணத்துக்கு முயற்சி செய்யும்போதுதான் நிஜமாகவே மாமியார் வீட்டில் தூக்கி கொண்டுபோய் வைத்துவிட்டனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவரின் மகன்தான் சந்தோஷ். 23 வயதான இவர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கடந்த 5 மாசத்திற்கு முன்னாடி கருவிழிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சத்யா என்ற 20 வயது பெண்ணை காதலித்துள்ளார்.

வீட்டுக்கு தெரியாமல் கல்யாணமும் செய்து, திருப்பூரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.ஆனால் கொஞ்ச நாளிலேயே சந்தோஷை காணவில்லை.. அதனால் சத்யா, போலீஸ்வரை சென்று புகார் தந்தார். அதன்படி போலீசாரும் தேடி வந்த நிலையில், சசிகலா என்ற 19 வயது பெண்ணை காதலித்து, கல்யாணமும் செய்து, அதே திருப்பூர் பகுதியில் வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்த விஷயம் சத்யாவுக்கு தெரியவந்தது.திரும்பவும் சத்யா, ஒரத்தநாடு ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதையடுத்துதான் சந்தோஷை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, சந்தோஷ் இதுவரை 8 பெண்களை ஏமாற்றியதுடன், கல்யாணமும் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. எல்லா இளம் பெண்களையும் ஒரே பாணியில்தான் பேசி கவிழ்த்துள்ளார்.”நீங்க அழகா இருக்கீங்க” என்றதுமே அந்த பெண்களின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு வருமாம்.

பெண்கள் சோகமாக இருந்தால், ஆதரவு தருவது போலவும், பாசமாக இருப்பது போலவும் டயலாக்கை பேசி தன் பக்கம் கவிழ்த்து விடுவாராம் சந்தோஷ்.. இந்த நயவஞ்சக பேச்சில்தான் பெண்கள் ஏமாந்துள்ளனர். திருட்டு தாலி கட்டி, திருட்டுத்தனமாக குடித்தனமும் நடத்தி, அவர்களிடம் பணம், நகையும் பறித்து கொண்டு எஸ்.ஆகி விடுவாராம். இப்போது 9-வதாக ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய சந்தோஷ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதற்குள் போலீசார் பிடியில் சிக்கிகொண்டுள்ளார்.