நடிகர் கமலஹாசன் தனது கட்சியினை அறிவிப்பதற்கு முன் நடந்தது பரபரப்பு…! அப்போவே தெரியும்

சென்னையில் நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பெயரை அறிவிப்பதற்கு முன்னர் சன் டிவி நடத்திய நட்சத்திர கலை விழா கலந்து கொண்டு உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் விவேக் தொகுத்து வழங்க கமல்ஹாசனிடம் விவேக் என்ன கேள்வி கேட்டார், கமல் அதற்கு என்ன பதில் சொன்னார் என்று சன் டிவியின் முக நூல் பக்கத்தில் சின்ன வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள். பார்க்க நன்றாக இருந்தது.கமல் என்ன சொல்லி இருக்கார் பாருங்க. நடிகர் விவேக் பேசுகையில் நீங்கள் பேசிய வசனத்தில் உங்களால் மறக்க முடியாத வசனம் எது என்று கேட்டார். எல்லாருக்குமே கலைஞர் எழுதி நடிகர் திலகம் பேசின வசனம்தான் பேச பிடிக்கும். எனக்கும் அது மாதிரிதான்,  எழுதிய வசனத்தை நடிகர் திலகம் பேசினதை வாழ்நாளில் பாக்கியமாக நினைக்கிறேன் என்று சொல்லி இருக்கார்.

தேவர் மகன் படத்தில் சிவாஜி சார் பேசின வசனம். உங்ககிட்ட அதை நான் சொல்றதுதான் சரியா இருக்கும், அதாவது விதை நான் போட்டதுன்னு எழுதி இருப்பேன். அதை நீங்க முப்பது லட்சம் விதைகளை போட்டு நினைவாக்கி இருக்கிறீர்கள் என்று கமல் சொன்னார்..மீண்டும் விவேக் கேட்டார்.. எல்லாரும் கட்டை விரலை நனைக்க கூட அச்சத்தில் இருந்தபோது, நீங்கள் கழுத்துவரை இந்த விஷயத்தில் மூழ்கி இருக்கிறீர்கள். எப்படி நடந்தது இது என்று கேட்டார். அப்போது பார்த்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருந்த ரஜினியின் முகத்தை காண்பித்தார்கள். அவர் முகத்திலும் கமல் என்ன சொல்லப் போகிறார் என்கிற ஆவல் இருந்தது. கணுக்கால் கூட நனைக்க கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தவன்தான் நான். சென்னையில் வெள்ளம் வந்தபோது எதிர்பாராதவிதமாக எப்படி பலர் கழுத்து வரை நீரில் நின்றார்களோ.

அப்படித்தான் எனக்கு எதிர்பாராமல் கழுத்தளவு மூழ்கும் சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன் என்று சொன்னார். இருவரும் பேசியது கமல் அரசியலில் குதிக்க இருந்தது பற்றித்தான். ஆனாலும் பூடகமாக கேள்வி கேட்ட விவேக். தெரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க. தெரியாதவங்க தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்று சொன்னார்.