
மஹாராஷ்டிராவில் வழக்கின் விசாரணை நாளை ஒத்துவைக்கப்பட்டது பாஜக ஆட்சி அமைத்தற்கு எதிராக தொடரபட்ட வழக்கு . .மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கின் விசாரணை என்.வி. ரமணா, அசோக் பூஷன், சஞ்சீ கண்ணா ஆகியோர் அடங்கி அமர்வு முன் நடைபெற்றது. இதில் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடுகையில், ஆளுநரை விரைவாக வேலை செய்ய சொல்லவோ, அவசரப்படுத்தவோ முடியாது. ஆதரவு கடிதங்கள் குறித்து ஆளுநர் விசாரிக்க தேவையில்லை’ என தெரிவித்தார்.
NCP-Congress-Shiv Sena petition: Supreme Court reserves order for tomorrow 10.30 am. https://t.co/PyKO0WzEJ4
— ANI (@ANI) November 25, 2019
மேலும் 54 தேசிவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், என்.சி.பியின் தலைவரே நான்தான் என அஜித் பவார் கடிதத்தில் உள்ளதாக கூறியுள்ளார். பல்வேறு கேள்விகள் குறித்து விவாதிக்க வேண்டி உள்ளதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான உத்தரவு நாளை காலை 10:30 மணிக்கு வழக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.