தனியாகவரும் பல இளம் பெண்களை வசியப்படுத்தி உறவுகொள்ளும் இளைஞன்!… தமிழ்நாட்டு MBA பட்டதாரி பெங்களூருவில் கைது !….

பல பெண்களை வசிய படுத்தி பாலியல் பண்ண இளைஞர் ! தான் எம்.எல்.ஏ மகன் என கூறி பல இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த தமிழக இளைஞரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.சமீபத்தில் பெங்களூரு காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரில் ” கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ மகன் கார்த்திக் ரெட்டி என்பவர் தன்னை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக” கூறியிருந்தார்.

மேலும் சில வழக்குகள் இதுபோன்று தொடர்ந்து பதிவானது. அதில் எல்லாம் கார்த்திக் ரெட்டி மற்றும் கிரண் ரெட்டி என்பவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து புகார்களிலும் எம்.எல்.ஏ மகன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், இளம் பெண்கள் அனைவரும் ஏமாந்தது ஒரே ஒரு தவறான நபரிடம் தான் என்பது தெரியவந்தது.பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்த புகைப்படங்களை கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,

இளம்பெண்களை ஏமாற்றிய கார்த்திக் ரெட்டி என்கிற ஜஹாங்கீரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபர் குறித்து தோண்ட தோண்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து பேசிய பெங்களூரு காவல்துறையினர், ”திருச்சியை பூர்விகமாக கொண்ட இவருக்கு ஸ்ரீரங்கம்தான் சொந்த ஊர். எம்.பி.ஏ பட்டதாரியான இவருடைய உண்மையான பெயர் ஜஹாங்கீர்.