‘டிக் டாக்கில்’ ஒரே நாளில் பிரபலமடைந்த தன் மகளை…! கொடூர முறையில் கொலை செய்த தாய்..! வெளிவந்த உண்மை..

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பகடாலபேட்டையில் சதீஷ்குமார் வசித்து வருகிறார். மனைவி இறந்த நிலையில் தீப்திஸ்ரீ என்ற தன் 7 வயது பெண்குழந்ததியுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது அதேபகுதியை சேர்ந்த சாந்தகுமாரி என்றப்பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தித்துக்கொண்டார் சதீஷ்குமார், திருமணம் ஆனா சிலகாலம் தீப்திஸ்ரீயை பாசமுடன் கவனித்து வந்த சாந்தகுமாரி பிறகு தனக்கொரு ஆண்குழந்தை பிறந்துடன் தன் கணவரின் மகளான தீப்திஸ்ரீயை திட்டுவதும் அடிப்பதும் கொடுமை செய்துவந்தார்.

இதனை பார்த்த தீப்திஸ்ரீயின் பாட்டி தன் வீட்டுக்கு அழைத்துவந்து வளர்த்து வந்தார். பாட்டி வீட்டில் வளர்ந்த தீப்திஸ்ரீ சமூகவலைத்தளமான டிக் டாக்கில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி எல்லோரிடமும் பிரபலமடிந்தார் . இதனை அறிந்த சதீஷ்குமார் தன் மகளுக்காக பாட்டியிடம் மாதம்தோறும் ரூபாய் 2000 கொடுத்துவந்தார். இதனால் கோபமான சாந்தகுமாரி பள்ளியில் படிக்கும் தீப்திஸ்ரீயை அவசரம் அவசரமாய் அழைத்து வந்து அருகில் உள்ள ஏரியில் கழுத்தை நெரித்து கொடூரமுறையில் கொலை செய்து பின் சாக்கு முட்டையில் கட்டி போட்டு வந்துவிட்டார்.

மகள் தீப்திஸ்ரீயை காணவில்லை என்று சதீஷ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிறகு போலீசார் பள்ளியின் அருகே உள்ள கேமராவை ஆய்வு செய்ததில் சாந்தகுமாரி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. பின் போலீசார் சாந்தகுமாரியை கைது செய்தனர்.