இப்படி போய் மாட்டிகிட்டியே !.. அதுக்குத்தான் ஓவரா பறக்கக்கூடாது ,… ‘தாறுமாறாக பறந்த விமானம்’.. உயர் மின்னழுத்த கம்பிகளில் ‘சிக்கியதால்’ பரபரப்பு..

வர வர சின்ன சின்ன விமானம் தன பெரியளவில் அபத்த ஏற்படுத்துது , அமெரிக்காவில் சிறியரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்து உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் மினசோட்டா பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் காஸ்கோவிச் (65). இவர் பைபெர் கப் எனும் தனது சிறியரக விமானத்தை நேற்று ஓட்டிச் சென்றுள்ளார். வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தாறுமாறாகப் பறந்து அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் விமானத்தை ஓட்டிச் சென்ற தாமஸ் காஸ்கோவிச்சை எந்தவித காயமுமின்றி மீட்டுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், “அவசர எண்ணுக்கு அழைப்பு வந்ததும், நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். விமானம் சிக்கியதும் மின்னழுத்த கம்பிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விமானி எந்தவித காயமுமின்றி மீட்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளனர்.