‘வீட்டு பக்கம் யார் யாரோ வர்றாங்க’.., ரொம்ப பயமா இருக்கு..! கதறும் பிக்பாஸ் “காயத்ரி ரகுராம்”..!

தமிழ் சினிமாவில் விசில் படம் மூலம் அறிமுகமானவர் காயத்திரி ரகுராம். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒப்பரப்பான முதல் பிக்பாஸ் சீசன்னில் கலக்கியவர். இவர் சில தினங்களுக்கு முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறிவந்த நிலையில் பல விமர்சனங்களுக்கு ஆளானார். தற்போது வரை சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.

இதனால் காயத்திரி வீட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து போன் செய்து கொலை மிரட்டல்விடுகிறார்கள். சோஷியல் மீடியாக்களில் சர்ச்சை கருத்துக்களை பரப்பிவருகிறார்.

மேலும் தனது வீட்டருகில் முகம் தெரியாத மர்ம நபர்கள் சுற்றிவருகிறார்கள் இதனால் என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் காயத்திரி.