இறந்த மான் வயிற்றில் இருந்த 7 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள்!…அழிந்து கொண்டிருக்கும் பிற வாழ் உயிர் இனங்கள்?….

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் பிற வாழ் உயிர் இனங்கள் அழிந்து வருகிறது. அதற்கு எடுத்து காட்டாக, ஒரு மான் இறந்து உள்ளது. தாய்லாந்தில் இறந்த மான் வயிற்றில் இருந்து 7 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.தாய்லாந்தில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற குப்பைகளை விழுங்கியதில் ஒரு காட்டு மான் இறந்து கிடந்ததாக ஒரு அதிகாரி செவ்வாய்க்கிழமையன்று தகவல் வெளியிட்டார்.நாட்டின் நீர் மற்றும் காடுகளில் குப்பைகளை கொட்டுவது குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தென்கிழக்கு ஆசிய நாடு உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் நுகர்வோரில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் தாய்லாந்து ஒவ்வொரு ஆண்டும் மறுசுழற்சி செய்யமுடியாத 3,000 ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறது.

ஆமைகள் மற்றும் dugong போன்ற கடல் விலங்குகள் இதுபோன்ற கழிவுப்பொருட்களின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகளில் அவற்றின் வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து வடக்கே 390 மைல் தொலைவில் உள்ள நான் மாகாணத்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 10 வயது மான் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் ‘வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என குன் சாத்தான் தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்ட பிராந்தியத்தின் இயக்குனர் கிரியாங்சாக் தானோம்பூன் தெரிவித்துள்ளார்.