
திருட்டுவேலை நடக்கிறது நடிகர் பெயரில் . நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் போலி இணையதளம் தொடங்கி பணம் வசூலிப்பதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். எழை எளிவர்கள், வசதியில்லா குழந்தைகள் உள்ளிட்டோருக்கு இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
முக்கியமாக ஆதரவற்ற பல குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கான செலவை லாரன்ஸின் அறக்கட்டளை ஏற்று கொள்கிறது.இந்நிலையில், ராகவா லாரன்ஸ் பெயரில் போலி இணையதளம் தொடங்கி பணம் வசூலிப்பதாக காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரானது ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகாரில் வீடு கட்டி தருவதாக கூறி பணம் வசூல் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.