கர்ப்பமானாலும் கடும் சோகத்தில் சீரியல் நடிகை ஆல்யா மானசா- இது மாறுமா?.. சந்தோசம் வரும் வேலையில் சோகம் ?….

காதல் திருமணம் புரிந்து கொண்ட சஞ்சீவ்-ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க போகிறது., ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா. இருவரும் ரீல் ஜோடியாக திரையில் அறிமுகமாகி பின் வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறினார்கள்.இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்கும் என்று பார்த்தால் வீட்டு பிரச்சனையால் மிகவும் சிம்பிளாக நடந்தது. அண்மையில் இவர்கள் பற்றி சந்தோஷ விஷயம் என்னவென்றால் ஆல்யா மானசா கர்ப்பமாக இருக்கிறார் என்று தான்.

இதுகுறித்து சஞ்சீவ் ஒரு பேட்டியில், ராஜா அல்லது ராணி யார் வந்தாலும் சந்தோஷம் தான். குழந்தை பிறந்தால் முதலில் தனது அம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்பது ஆல்யாவின் ஆசை. அவர்களது அம்மா விரைவில் எங்களது திருமணத்தை ஏற்று அவரிடம் பேசுவார் என நம்புவதாக சஞ்சீவ் கூறியுள்ளார்.தனது அம்மா தன்னிடம் பேசாதது இந்த நேரத்திலும் ஆல்யாவிற்கு பெரிய வருத்தமாக உள்ளதாம்.