கர்ப்பிணியின் ஸ்கேனின் தெரிந்த இரட்டையர்கள்… ஆனால் அதன் பின் மருத்துவர்களுக்கு தெரிந்த உண்மை!….. தாயின் நிலை ?….

அமெரிக்காவின் கொலம்பியாவைச் சேர்ந்தவர் மோனிகா. கர்ப்பிணியான இவர் கடந்த மாதம் இரட்டையர்களை பெற்றெடுத்தார். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களில் ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், இன்னொரு குழந்தை வளர்ச்சி பெறாத உயிரற்ற கருவாகவும் இருந்துள்ளது.இதனால் அந்த கரு, பிறந்த குழந்தையின் உடலில் ஒட்டியிருந்ததால், முதலில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுத்தனர்.அதன் பிறந்த 24 மணி நேரம் கழித்து, குழந்தையின் உடலில் ஒட்டியிருந்த அந்த வளராத கருவை, அறுவை சிகிச்சை மூலம் அதாவது லேப்ராஸ்கோப்பி சிகிச்சை செய்து மருத்துவர்கள் நீக்கினர்.

மோனிகா கர்ப்பமான ஏழாவது மாதத்தின் முடிவில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அதில் இரண்டு தொப்புள் கொடி இருப்பதை மருத்துவர்கள் கண்டனர். இதனால் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்கள் என்று முடிவு செய்த மருத்துவர்கள், அதன் பின் பார்த்த போது, அதில் ஒரு கருவுக்கு மட்டும் மூளை ,இதயம் போன்ற உயிருக்குத் தேவையான உறுப்புகள் வளர்ச்சியடையாமல் இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

வளர்ச்சியடையாத கரு, இன்னொரு கருவின் உடல் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பதால், இதற்கான வேறு எந்தச் சிகிச்சைகளையும் அப்போதைக்கு மேற்கொள்ளாமல் விட்ட மருத்துவர், குழந்தை பிறந்த பின் இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பெரும்பாலும் வளர்ச்சியடையாமல் இருக்கும் கருவால், தாய்க்கோ நன்கு வளரும் கருவுக்கோ ஏதேனும் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும். அதிர்ஷ்டவசமாக மோனிகாவின் பிரசவத்தில் அப்படி ஏதும் ஏற்படவில்லை. தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளார்கள், மேலும் குழந்தைக்கு இட்ஸ்மாரா என பெயர் வைத்துள்ளனர். தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர் Miguel Parra-Saavedra தெரிவித்துள்ளார்.