‘இரண்டாம் திருமணம் செய்ய இதான் காரணம்’..! என்கிறார் மைனா (நந்தினி) .. ?நெருக்கடியில் நடிகை எடுத்த முடிவு ….

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தன் அடையாளத்தை பெற்றார் நந்தினி.இதன்பிறகு பல சீரியல்களில் நடித்த நந்தினி சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இதை தவிர்த்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். கடந்த வருடம் இவர் காதலித்து வந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.கணவர் இறந்து ஒரு வருடத்திற்குள் நந்தினி நடிகர் யோகேஷ்வரன் என்பவரை சமீபத்தில் காதலித்து வந்தார். தீடீரென இருவரும் திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தனர்.

பல கேள்விகள் நந்தினியிடம் ரசிகர்கள் சமுகவலைத்தளத்தில் கேட்டு வந்தனர். அதற்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார் நந்தினி. நான் இரண்டாம் திருமணம் செய்ய யோசித்து வந்த நிலையில் யோகேஷ்வரன் என்னிடம் காட்டிய அன்பு தான் திருமணம் வரை சென்றதற்கான காரணம் என்று கூறியுள்ளார். அவரது நல்லமனமும், அக்கரையாக புரிந்துகொள்ளும் எண்ணமும் தான் இதற்கான காரணம். அதனால் தான் அவரை திருமணம் செய்தேன் என்று கூறியுள்ளார் நந்தினி.