நித்யானந்தாவிடம் என்ன தொடர்பு.. சந்தித்தது உண்மையா? கோபத்துடன் விளக்கமளித்த சின்மயி..! பரபரப்பு விவாதம் ….

பிரபல பாடகியான சின்மயி ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது ,சாமியார் நித்யானந்தாவை சந்தித்து பாடகி சின்மயி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது சின்மயி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மையியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் கடந்த மாதங்களுக்கு முன் மீடு இயக்கத்தின் மூலம், பெண்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல சின்மயிக்கு வைரமுத்துவால் ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்களே இதற்கு காரணம் அமைந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நித்யானந்தாவை குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பாடகி சின்மயி நித்யானந்தாவிடம் பிரசாதம் வாங்குவதுபோல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல சர்ச்சைகளில் ஏற்படுத்தி வந்துள்ளது.இதற்கு தற்போது சின்மயி விளக்கமளித்துள்ள சின்மயி அந்த புகைப்படம் உண்மையில்லை, அனைத்து மார்பிங் செய்யப்பட்டவை என தெரிவித்துள்ளார்.

மேலும், அது அனைத்தும் போலியானவை என்பதற்கான ஆதாரத்தையும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காட்டமாக பதிலளித்த அவர் இதையெல்லாம் சும்மா செய்கிறார்களா? இல்லை யாராவது பணம் கொடுத்து செய்கிறார்களா? என பதிவிட்டுள்ளார்.