வெளிநாட்டில் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை ?…”விசிலடித்தேன் அவள் கண்டுகொள்ளவில்லை அதனால்”… இந்திய பெண்ணைக் கொன்றவனின் ஆணவ வாக்குமூலம்!….

இந்திய பெண்களுக்கு வெளி நாட்டில் பாதுகாப்பு கிடையாது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு ,இந்திய இளம்பெண் அமெரிக்காவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யபட்ட வழக்கில், தான் அந்த அழகான பெண்ணை விசிலடித்துக் கூப்பிட்டதாகவும், அவள் தன்னை கண்டுகொள்ளாததால் அவளை வன்புணர்ந்து கொன்றதாகவும் ஆணவ வாக்குமூலம் அளித்துள்ளான் குற்றவாளி. சிகாகோவின் இல்லினாயிஸ் பலகலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய பெண்ணான ரூத் ஜார்ஜ் (19), காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது காரின் பின் இருக்கையிலேயே, கல்லூரி வளாக கார் நிறுத்துமிடத்திலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் டொனால்ட் தர்மன் (26) என்னும் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.தர்மன் கொள்ளைச் சம்பவம் ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தான்.

தற்போது இரண்டாண்டு சிறை வாசத்திற்குப்பின் ஜாமீனில் வந்துள்ள அவன் இந்த துணிகர குற்றத்தைச் செய்துள்ளான்.அவன் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த அழகான பெண்ணின் பின்னால் தான் விசிலடித்துக்கொண்டே சென்றதாகவும், ஆனால் அவள் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளான்.அதனால் கோபமுற்று அவளைப் பிடித்து காரின் பின் இருக்கையில் தள்ளி வன்புணர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளான் அவன்.அந்த இடத்தில் ஆணுறை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், குற்றம் நடந்த இடம் முழுவதும் என்னுடைய DNA சிதறிக் கிடக்கும் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவன் தெரிவித்துள்ளான்.

ரூத்தின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன் பின் தெரியாதோர் உட்பட ஏராளமானோர் ரூத்தின் குடும்பத்தாருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்மன், டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளான்.