ரயிலுக்குள் புகுந்து அச்சுறுத்திய 10 அடிநீள ராஜ நாகம்! பயணிகள் ஓட்டம்!! வைரலாகும் வீடியோ !….

இந்தியா, உத்தரகாண்ட்டில் 10 அடி நீள ராஜ நாகம் ஒன்று, ரயிலுக்குள் புகுந்து பயணிகளை அச்சுறுத்தியது. இதனால் பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். வனத்துறையினர் வர வழைக்கப்பட்டு பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் காத்கோடம் ரயில் நிலையத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலுக்குள் 10 அடி நீள ராஜநாகம் புகுந்தது. பாம்பை பார்த்ததும் பயணிகள் பதறியடித்து ஓடினர்.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர், வனத்துறையின் உதவியோடு பாம்பை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.தான் பிடிக்கப்படப் போவதை உணர்ந்த பாம்பு, ரயில் சக்கரங்களுக்கு சற்று மேலேயுள்ள பகுதிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது.நீண்ட முயற்சிக்குப் பின்னர் ராஜநாகம் பத்திரமாக பிடிக்கப்பட்டு அடர்ந்த வனத்திற்குள் விடப்பட்டது.

இருப்பினும் நீண்ட முயற்சிக்குப் பின்னர் ராஜநாகம் பத்திரமாக பிடிக்கப்பட்டு அடர்ந்த வனத்திற்குள் விடப்பட்டது.இந்த வீடியோ லைக் மற்றும் ஷேர்களை குவித்து வருகிறது.