என்மகள் எதற்காக சுட்டு கொல்லப்பட்டாள் என்றே தெரியவில்லை?…கதறும் இந்திய பெண்ணின் பெற்றோர்!….

இந்தியாவை சேர்ந்த பெண் சடலமானார் கனடாவில்., கனடாவின் சர்ரேயில் உள்ள ஒரு வீட்டில் இருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.விரைந்து சென்ற பொலிசார் இறந்து கிடந்தவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவியாகிய பிரப்லீன் கவுர்(21)என்று தெரிவித்துள்ளனர்.அவருடன் 18 வயதுடைய கனேடிய இளைஞர் ஒருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கும் பிரப்லீன் கவுர்க்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை.2016ஆம் ஆண்டு மாணவர் விசாவில் கனடா சென்ற பிரப்லீன் கவுர் வான்கூவரிலுள்ள லங்கார கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.

ஒரு கடையில் வேலை செய்துகொண்டு சர்ரேயில் ஒரு வீட்டில் தனது நண்பர்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்,  நவம்பர் மாதம் 21ஆம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனேடிய பொலிசார் தங்களை தொலைபேசியில் அழைத்ததாக தெரிவிக்கும் பிரப்லீன் கவுர் இன் தந்தை, உங்கள் மகள் கொல்லப்பட்டுவிட்டாள் என்று மட்டுமே பொலிசார் தெரிவித்ததாகவும், வேறு எந்த தகவலும் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

கனடாவுக்கு சென்று தங்கள் மகளின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிடும் முயற்சியில் பிரப்லீன் கவுர் இன் குடும்பத்தார் இறங்கியுள்ளனர்.கடன் வாங்கித்தான் மகளை கனடாவுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ள அவரது தந்தை, இன்னமும் 15 லட்ச ரூபாய் வரை கடன் அடைக்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வர இருப்பதாக தெரிவித்திருந்த மகளை பிணமாக கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதே என கதறுகிறார்கள் பிரப்லீன் கவுர் இன் பெற்றோர். பிரப்லீன் கவுர்  எப்படி உயிரிழந்தார், அவரை சுட்டுக்கொன்றது யார், அவருடன் இருந்த வாலிபர் யார் என்ற எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை.