‘கிராமத்தில் வாழ்ந்த 500 குடும்பங்களும் மாயம்’..! காரணம் அம்மனா..? இல்லை பேய்களை..? இன்றுவரை தீராத மர்மம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள குல்தாரா கிராமம் இந்த கிராமம் பேய் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் இரவில் தங்கினால் தங்கும் நபர்களை பேய் கொன்றுவிடும் என்று கூறுவார்கள். ஆம் அந்த பேய் கிராமத்தில் தான் இரவு பகலாக கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் எடுக்கப்பட்டது.

அந்த பேய் கிராமத்தை பற்றி சில திடுக்கிடும் தகவலைகளை பார்ப்போம்
13ம் நூற்றாண்டு காலத்தில் பாலி என்ற நகரத்தில் இருந்து பிரிந்து அந்த சிலரால் ஆரமிக்கப்பட்டது தான் இந்த குல்தாரா கிராமம் இந்த கிராமம் சில குறிப்பிட்ட சமூகத்தினாரால் ஆரமிக்கப்பட்டது.

சிறு கும்பலாக வந்தவர்கள் நாளடைவில் தன் குடும்பத்தை பெருக்கிவந்தனர் 19ம் நூற்றாண்டில் சுமார் 500 மேற்பட்ட குடும்பங்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் மகிஷாசுரமர்த்தினி என்ற அம்மன் கோவில் கட்டி அதனை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து வந்தனர்.

திடீர் என்று அந்த கிராமத்தை சார்ந்த 500 குடும்பங்களும் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதற்க்கு காரணங்கள் பல அடுக்கிவைக்கிறார்கள் அந்த கிராமத்தில் அம்மனுக்கு கிராமமக்கள் தீங்கு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் சாமி குற்றம் ஏற்பட்டு அந்த அம்மனின் சக்தி முழுவதும் இழந்து விட்டதால் சாத்தான்கள் , அதாவது பேய்கள் வந்து அந்த கிராமத்தில் குடிபெயர்ந்து விட்டதால் அந்த கிராமங்களை கொண்றுகுவித்து வருகிறது என்றும் சொல்லிவருகிறார்கள்.

இரவு நேரங்களில் அந்தக்கிராமத்தில் தங்குபவர்களுக்கு பேய் பிடித்துவருகிறது. மற்றும் பலர் மரமான முறையில் இறந்து விடுகிறார்கள். சில நபர்கள் அந்த கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ஆறு இருந்ததாகவும் அது நாளடைவில் வறண்டதால் குடிநீர் இல்லாததால் அந்த கிராம மக்கள் இரவோடு இரவாக ஊரை காலிசெய்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்

இதனால் இந்த கிராமத்தை அரசே ஏற்று கவனித்து வருகிறது. மற்றும் இந்த கிராமத்தை சுற்றுலா தளமாக்கி காலையில் இருந்து மலை ஆறு மணிவரைக்கும் என்று அரசு கடைபிடிக்கிறது. இரவில் பேய்கள் நடமாட்டம் என்பதால் இந்த ஏற்பாடு.ஆனால் அரசின் அணுமைதியோடு இரவு பகலாக அந்த பேய் கிராமத்தில் தான் இரவு பகலாக கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் எடுக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.