சீனாவில் நடக்கும் மிகப் பெரிய கொடுமை?… இளம் பெண் வெளியிட்ட பகீர் கிளப்பும் வீடியோ!…. அவரது காண்டாக்ட் பிளாக் செயப்பட்டது ?…

இளம் பெண் ஒருவர் சோசியல் வலைத்தளங்களில் பகிர்ந்த ஒரு முக்கிய செய்தி அதிர்ச்சியில் சீனர்கள் . சீனாவில் இஸ்லாமியர்களைப் பற்றி இளம் பெண் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பெரோஷா அஸிஸ் என்ற பெண், சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ஆரம்பத்தில் பெண்களின் மேக் அப் குறித்து பேசினார்.

அப்போது திடீரென்று சீனாவில் என்ன நடக்கிறது தெரியுமா? என்று இணையவாசிகளிடம் கேள்வி எழுப்பினார். அதன் பின் அவர் அங்கு இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களின் குடும்பங்களை பிரித்து, கடத்தி, கொலை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் சீனாவில், கட்டாய மதமாற்றம் நிகழ்வதாகவும், இஸ்லாமியர்கள் மீது பேரழிவு கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அவரது சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.