
ஆடம்பர வாழ்க்கைக்காக திருடும் கல்லூரி மனைவி மோஹன பிரியா… சென்னையில் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண்களிடமிருந்து பணப்பை, செல்போனை திருடி வந்த இளம்பெண் வசமாக சிக்கிக் கொண்டார்.சமீபகாலமாக பெண்கள் பெட்டியில் பயணிக்கும் பெண்களிடமிருந்து அதிகளவில் திருட்டு நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைத்து கைப்பை, நகைகள், மொபைல் போன்கள் மற்றும் பணம் திருடு போவதாக புகார்கள் வந்துள்ளன. மாம்பலம் பொலிசார், மாறுவேடத்தில் வந்து கண்காணிக்கத் தொடங்கினர், இதில் சந்தேகப்படும் படியாக இளம்பெண் ஒருவர் அடிக்கடி ரயிலில் பயணிப்பது தெரியவந்தது.
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் மோகனப்பிரியா என்பதும், தனியார் அறிவியல் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது.தொடர்ந்து பொலிசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தான் திருடுவதை ஒப்புக் கொண்டார், அவரிடமிருந்து 4 கிராம் தங்க நகைகள், பணம் மற்றும் கைப்பைகளை பொலிசார் பறிமுதல் செய்தனர்.அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு அப்பா இல்லை, அம்மா மீன் வியாபாரம் செய்து கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார், நானும் ஓரளவு நன்றாக படிக்கக்கூடிய பெண் தான்.
என்னுடன் படிக்கும் மாணவிகள் மாடர்னாக வருவார்கள், அதை பார்த்த எனக்கும் ஆசை வந்துவிட்டது, ஆனால் பணம் இல்லை.இதனால் திருட முடிவு செய்தேன், கல்லூரிக்கு சென்றுவிட்டு மீதமுள்ள நேரங்களிலும், கல்லூரி விடுமுறை நாட்களிலும் திருட்டில் ஈடுபட்டேன்.ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் உதவி செய்வது போன்று அவர்களது உடமைகளை வாங்கி வைத்துக் கொள்வேன்.
அவர்கள் கவனிக்காத நேரத்தில் பொருட்களை திருடிவிடுவேன், இதனால் கையில் பணம் புழங்கியதால் நானும் பணக்கார வீட்டுப் பெண் போல் வாழ்ந்து வந்தேன், இந்த விடயம் என் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது.இதேமாதிரி திருட்டில் ஈடுபடும் போது பொலிசிடம் சிக்கிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.அவர் மீது வழக்குபதிவு செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.