சென்னையில் தற்கொலைக்கு முயன்று “5 நாட்கள்” கழித்து கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!

சென்னை பெரம்பூர் காமராஜ் நகரில் ஹஜிரா பானு என்ற திருமணமான இளம் பெண் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர் 5 நாள் சிகிச்சிக்கு பிறகு இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவர் மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்.

மகள் இறந்த நிலையில் பெற்றோர்கள் எனது மகளை அவர் கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர் கொடுமைப்படுத்தி வந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் ஹாஜிராவின் பெற்றோர் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .