இருமலுக்காக ஊசி போட்ட இளம்பெண் மரணம்!… தவறான இடத்தில் செலுத்திய ஊசி ?…. அதிர்ச்சி சம்பவம் …..

மருத்துவரின் அஜாக்ரதையினால் இழந்த இளம்பெண் , சென்னையில் இருமல் பிரச்சனைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு தவறான நரம்பு ஊசி போடப்பட்டதால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் நித்யா(வயது 21), பட்டப்படிப்பு படித்திருந்த நித்யாவுக்கு இருமல், வாந்தி ஏற்பட்டுள்ளது.

அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அங்கே நித்யாவுக்கு மருத்துவர் சுஜாதா கருணாகரன் நரம்பு ஊசி போட்டுள்ளார், இதனால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் நித்யா. பதற்றமடைந்த மருத்துவர், ஜெயின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

சுயநினைவை இழந்த நிலையில் நித்யாவை கொண்டு சென்றதால் அங்கே உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர், தொடர்ந்து ஆட்டோவில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் நித்யாவை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், தவறான இடத்தில் ஊசி போட்டதே தங்கள் மகளின் மரணத்துக்கு காரணம் என மருத்துவர் சுஜாதா கருணாகரண் மீது பொலிஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.