பள்ளி நோட் பேப்பரை கிழித்து போலீசில் புகார் கொடுத்த 10 வயது சிறுவன்..! நாட்டையே கலக்கிவரும் சம்பவம்.. திகைத்து போன போலீசார்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், உள்ள மேப்பையூர் பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் தன் சைக்கிள் வேண்டி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது.

புகார் மனுவில் கூறியது :
எனது சைக்கிள் ரிப்பேர் ஆகியுள்ளதால் அதனை சரிசெய்வதற்க்காக சைக்கிள் கடையில் கடந்த செப் 5ஆம் தேதியன்று என் தம்பியுடன் சென்று விட்டு வந்தோம் முன்பணமாக 200 ரூபாய் கொடுத்துள்ளோம். ஒரு வாரம் சென்ற பின்னரும் சைக்கிள் வராததால் கடைக்காரருக்கு போன் பண்ணோம் சரிவர போனை எடுப்பதில்லை , எடுத்தாலும் விரைவில் முடித்து தருகிறேன் என்று கூறிவிடுகிறார். கடைக்கு சென்றாலும் கடை பூட்டாப்பட்டுள்ளது. தற்போது வரை இரண்டு மாதம் ஆகியுள்ளது. இதனை கேட்பதற்கு எங்கள் வீட்டில் யாருமே தங்கள் தான் உதவி செய்யாவேண்டும் என்று கூறிருந்தார்

இதனை கண்டா போலீசார் சிறுவன் நம் மீது வைத்துள்ள நமிபிக்கைக்கு உதவ வேண்டும் என்று கூறி அந்த சைக்கிள் கடைக்காரரை விசாரித்ததில் அவரின் மகன் திருமண ஏற்பாட்டினால பிஸியாக இருந்துள்ளார் மேலும் தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் விரைந்து அந்த சிறுவன் சைக்கிளை சரிசெய்து தருகிறேன் என்கிறார்,

பின்னர் இரண்டு நாட்களிலே சைக்கிளை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை போலீசார் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

சைக்கிள் கிடைத்தவுடன் அந்த சிறுவன் போலீசாருக்கு நன்றி தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.