‘இந்தியாவை உலுக்கிய பிரியங்காவின் மரணம்’: சிசிடிவி காட்சி கண்டுபிடிக்கப்பட்டது !…..குற்றவாளியின் புகைப்படம் வெளியானது….

இந்தியா, ஹைதெராபாத் ,கால்நடை மருத்துவரின் கொலை சம்பவம் பெரும் சர்ச்சையாகி வருகிறது, இரவு நேரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். தெலங்கானாவின் Shamshabad -ஐ சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண் மிகவும் கொடூரமாக உடல் கருகி நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

 

இரவு நேரத்தில் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இவர், தன்னுடைய வண்டியின் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால், அதற்காக நின்று கொண்டிருந்த போது ஒரு சிலர் உதவ முன் வந்ததாக கூறி, தன் சகோதரிக்கு பயந்த நிலையில் போன் பேசியிந்தார்.போன் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலே கொடூரமாக இறந்து கிடந்தார். அவர் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.சி.டி.வி கட்சியில் பிரியங்கரேடி தனது பைக்கை டோண்டுபள்ளி டோல் கேட்டில் நிறுத்துகிறார், 3 மணி நேரத்திற்கு முன்பு அவர் தனது சகோதரிக்கு போனில் அழைப்பை செய்தார். விசாரணையில் அவரது உடைகள் மற்றும் சில மது பாட்டில்கள் இந்த பகுதிக்கு அருகில் காணப்பட்டன. ஸ்கூட்டர் 10 கி.மீ தூரத்திலும், 25 கி.மீ தூரத்தில் எரிந்த உடலிலும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி மொகமத் பாஷா என்ற நபர்தான் என்று அங்கிருக்கும் உள்ளூர் உடகங்கள் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதோடு பிரியங்காவின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.