லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் துணிந்து செயல்பட்ட ஹீரோக்களுக்கு ராணி புகழாரம் செய்தார் !…. மகிழ்ச்சியான நிகழ்வு ….

வீர செயல் புரிந்தவர்களுக்கு உலகிலுள்ள பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் வருகின்றன , அதைபோல் லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியை மடக்கி பிடித்த நபர்களை பிரித்தானிய ராணி புகழ்ந்துள்ளார். லண்டன் பிரிட்ஜில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2 மணியளவில், 28 வயதான உஸ்மான் கான் என்கிற பயங்கரவாதி பொதுமக்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான்.

இதில் ஆண், பெண் என இரண்டு பேர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த போது, தங்களுடைய உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியை மடக்கி பிடித்த ஹீரோக்களை ராணி புகழ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், ‘லண்டன் பிரிட்ஜில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைக் கேட்டு இளவரசர் பிலிப்பும் நானும் வருத்தமடைந்தோம்’.

அன்பானவர்களை இழந்த மற்றும் நேற்றைய பயங்கர வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் எண்ணங்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.காவல்துறை மற்றும் அவசரகால சேவைகளுக்கு, தன்னலமற்ற முறையில் உதவுவதற்கும் மற்றவர்களைப் பாதுகாப்பதற்கும் தங்கள் உயிரைப் பணயம் வைத்த துணிச்சலான நபர்களுக்கும் எனது நீடித்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ‘ எனக்குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கத்திக்குத்து தாக்குதலின் போது, போலந்தைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி தாமஸ் கிரே மற்றும் செஃப் லக்காஸ் ஆகியோர் குற்றவாளியை தடுத்து நிறுத்தியதில்ல் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.