மாடியிலிருந்து ஒன்றரை வயது குழந்தை கீழே விழுந்தது!… கவலைக்கிடத்தில் குழந்தை …..தீவிர சிகிச்சை …

சென்னை, 2 வயது குழந்தை மாடிலிருந்து கைதவறி குழந்தை கீழே விழுந்தது . கொடுங்கையூர், சௌகார்பேட்டை பகுதியில் மிகுந்த குறுகலான தெருக்களில், நெடுகலான வீடுகள் மாடிகளுடன் கட்டப்பட்டிருக்கும். இங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பால்கனிதான் பொழுதுபோக்கு என்பதால், பலரும் குழந்தைகளுக்கு சோறூட்டுவது, வேடிக்கை காண்பிப்பது போன்ற பழக்கங்களை செய்வது உண்டு. ஆனால், இதனால் எதிர்பாராத பல விதமான அசம்பாவிதங்கள் நடைபெறும் நிலையில், குழந்தைகள் தவறி விழுவதும் அவ்வப்போது நடந்து வரும் சோகங்களுள் ஒன்றாக உள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த சையத் அபுதாகீர் என்பவரின் ஒன்றரை வயது மகனுக்கு 2வது மாடியில் நேற்றைய தினம் சோறு ஊட்டிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது குழந்தை தவறி விழுந்ததை அடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை மிகவும் கவலை கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர், என்னினும் அந்த குழந்தைக்கு விடாமுயற்சியாக தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.